02 (27)

தெமட்கொட, மகுடாராமய பர்மா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மதகுருமார் வதிவிடம், தானசாலை உள்ளடங்கிய ஏழு மாடி கட்டிட திறப்புவிழா இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்கேற்புடன் இடம்பெற்றது.

அதிவண. தவுல்தன ஞாணீஸ்ஸர தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வண. கொட்டுகொட தம்மாவாஸ தேரர், வண. பலாங்கொட சோபித தேரர், ரங்கூன் நகரின் பிரிவெனா பணிப்பாளர் வண. பதந்த தம்மாநந்த தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.

மகுராகொட விகாராதிபதி வண. கித்திசார நாயக்க தேரர் உள்ளிட்ட விகாரை முகாமைத்துவ குழுவின் ஆலோசனைக்கமைய பர்மீய பௌத்த அடியார்களின் நிதி அன்பளிப்புடன் இப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்ற பின்னர் நினைவு படிகத்தை திரைநீக்கம் செய்து, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கட்டிடத்துக்கான நிதியுதவி செய்த பர்மீய நாட்டு அடியார்களுக்கான பாராட்டுப் பரிசு ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும், பௌத்த துறவிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

03 (24) 04 (19) 05 (20) 06 (16) 07 (16) 08 (15) 09 (14) 10 (14) 11 (19) 12 (12) 13 (12)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்