02

ஜனாதிபதி அவர்களால் இன்று ஜனாதிபதி செயலகத்தில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் இத்தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக தேசிய உணவு உற்பத்திக்கு அதிக முன்னுரிமையளிப்பதற்கான புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம்பற்றி ஆராயப்பட்டது.

அதன் பிரகாரம் எடுக்கப்பட்ட முடிவூகளுக்கமைவாக எதிர்வரும் வாரத்தில் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற உணவுப் பொருட்களின் அளவையூம் அதற்காக தற்பொழுது செலவிடப்படுகின்ற பணத் தொகையையூம் சமர்ப்பிக்கும்படி அமைச்சு செயலாளார்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவவுறுத்தல் வழங்கினார்.

எதிர்வரும் மாத போகத்தில் உணவூ நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிக்கின்ற அதேவேளையில் விதைகள், கன்றுகள் என்பவை தொடர்பில் விளம்பர ரீதியான நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு அறிவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்கு முறையாக மேற்கொள்ளவேண்டிய முறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் போதைப்பொருள் ஒழிப்புக்கான ஒருங்கிணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய ரீதியாக அழிவை ஏற்படுத்துகின்ற போதைப்பொருட்களை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காக அனைத்து பிரிவூகளும் ஒருங்கிணைந்து விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், தடுத்தல், ஒழித்தல் என்பவை தொடர்பாக கடுமையான சட்டங்களை வழுவாக நடைமுறைப்படுத்துவதுபற்றியூம் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி அவர்களுக்கும் அமைச்சு செயலாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இயற்கை வளங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான சூழல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவூம் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் அனைத்து பிரிவூகளையூம் இணைத்து ஜனாதிபதி செயலகத்தினூடாக சூழல் பாதுகாப்புக்கு விரிவான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியூம் ஜனாதிபதி ஆலோசனை கூறினார்.

ஏற்கனவே குப்பை கூல பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் அவை செயற்படாத சந்தர்ப்பங்கள் இருப்பதனால் இயற்கை வளங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தின் நேரடி தலையீட்டுடனும் ஆலோசனைகளுடனும் தேசிய உணவு உற்பத்தி போதைப்பொருள் ஒழிப்பு இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பான தேசிய வேலைத்திட்டமொன்றை அனைத்து அமைச்சுக்களின் ஒத்துழைப்புடனும் இணைப்பாக்கத்துடனும் தயாரிப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜானாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பிரதம அமைச்சரின் செயலாளர், ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

01

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்