03

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.

 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருவதுடன், இதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடாத்துதல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஏ.டி.சிறிசேன முதலாவது கொடியை ஜனாதிபதி அவர்களுக்கு அணிவித்தார்.

 

நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பியசிறி விஜயநாத் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

01

02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்