3

விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் இணைந்து செயற்படும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தேசிய தரச்சான்றிதழ்கள் விருது விழா – 2016 இன்று (27) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

பேண்தகு அபிவிருத்திக்கான தேசிய கொள்கைக்கேற்ப செயற்படுகையில், அனைவருக்கும் அதிகளவு கடமைகளும் பொறுப்புக்களும் வழங்கப்படுவதால் அச்சவால்களை வெற்றிகொள்வதற்காக அவற்றின் தரம் மற்றும் நியமங்கள் தொடர்பாக  விசேட கவனஞ் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் எதிர்காலத்திலும் அவர்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு அரசின் பரிபூரண ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

உயர்தரத்தில் அமைந்த நடுத்தர மற்றும் பாரிய அளவிலான உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்கும் வெற்றிகரமான நிறுவனங்களுக்கான சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனெவிரத்ன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குணவர்தன மற்றும் பணிப்பாளர் நாயகம் காமினி தர்மவர்தன உள்ளிட்ட குழுவினர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

4

2

1

9

8

7

6

5

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்