02

‘இருளடைந்த வாழ்வுக்கு ஒளி’ தேசிய பக்கவாத தின நடைப்பயணம் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது.

பக்கவாத நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டி பக்கவாத நோயை தவிர்க்கும் நோக்குடன் இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தினால் இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பக்கவாத நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டுவதற்கு இலங்கை தேசிய பக்கவாத சங்கம் மேற்கொள்ளும் சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அச் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அவர்கள் சுகாதார துறைக்காக ஆற்றும் சேவையை பாராட்டிய இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் எம்.டி.எம்.ரிப்ஷி அவர்கள், அதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மூளைக்கான குருதி வழங்கலில் சடுதியாக எற்படும் தடை காரணமாக   பக்கவாதம் ஏற்படுகிறது. உலகில் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் பக்கவாதம் இரண்டாவது இடத்திலுள்ளது. அத்துடன் முதியோர்களை அங்கவீனராக்கும் பிரதான காரணியாகவும் உள்ளது.

நடைப்பயணத்தில் இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் போஷகர் மருத்துவ கலாநிதி ஜே.பீ.பீரிஸ், நரம்பியல் நிபுணர் மருத்துவ கலாநிதி பத்மா குணரத்ன உள்ளிட்ட சுகாதார துறை அலுவலர்களும் கலைஞர்களும் பங்குபற்றினார்கள்.

03

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்