01

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் நிறைவேற்ற வேண்டிய பேண்தகு அபிவிருத்திக்கான இலக்குகளுடன் கூடிய “தேசிய பேண்தகு கலந்துரையாடலின்” முதலாவது சட்ட வரைபினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த வருடம் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட 2030 பேண்தகு தொலைநோக்கினை தயாரிப்பதற்கான ஜனாதிபதி விசேட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்ட வரைபினை பேராசிரியர் மொஹான் முனசிங்க ஜனாதிபதி அவர்களிடம் கையளித்ததுதுடன், பேராசிரியர்கள் சிறி ஹெட்டிகே, ஹேமந்தி ரணசிங்க மற்றும் கலாநிதி டப்ளியு.எல். சுமதிபால உள்ளிட்ட புத்திஜீவிகளும் இந்நிகழ்வில கலந்துகொண்டனர்.

பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் விவசாயம், போக்குவரத்து, மின்சக்தி, சுகாதாரம், கல்வி, நீர்வளம், சமுத்திர மீன்பிடி, நகர மற்றும் பௌதீக திட்டமிடல் இலக்குகளின் ஊடாக 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை பூர்த்திசெய்ய வேண்டிய இலக்குகள் தொடர்பாக இதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான நீண்ட கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.

இத்தகையதொரு தேசிய பேண்தகு அபிவிருத்திக்கான கலந்துரையாடல் நாட்டிற்கு சமர்ப்பிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்த சட்டவரைபு எதிர்காலத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்டு, அது தொடர்பான உரையாடல்களை நாட்டில் ஏற்படுத்தவும் தேசிய பேண்தகு அபிவிருத்திக்கான கலந்துரையாடல் எனும் பெயரில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் அதனை வெளியிடவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

01

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்