01

தேசிய வர்த்தக கொள்கை ஒன்றுக்கான முக்கிய பண்புகளை வெளியிடுவதற்காக தொழில்வல்லுனர்களின் தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணைக்குழுவிடம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை சாரம்சப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இன்று (04) முற்பகல் கொழும்பு 07, தொழில்வல்லுனர்கள் சங்க மத்திய நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

 

தொழில்வல்லுனர்கள் தேசிய முன்னணியின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதனியவினால் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

“71 வருட சட்டபூர்வ சுதந்திரத்தின் பின்னர் கொள்கை வகுப்பினூடாக உண்மையான சுதந்திரத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் இன்று பார்வையிட்டார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள், தொழிவல்லுனர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் பொறியியலாளர் கபில பெரேரா உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02

03

04

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்