4 (1)

ஐ.டீ.எச் தொற்றுநோய்களுக்கான தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் வார்ட்டும், பற் சிகிச்சை நிலையமும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (02) முற்பகல் திறந்துவைக்கப்பட்டன.

டெங்கு நோயாளர்களை அனுமதிக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தின் அனுசரணையில் இந்த நோயாளர் விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை கௌரவிக்கும் முகமாக மேல் மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ​ஜெனரல் சுதத்த ரனசிங்க மற்றும் மருத்துவமனைக்கு தாதியர்களை அமர்த்திய இலங்கை கடற்படையினருக்கும் ஜனாதிபதி அவர்களால் நினைவுச் சின்னங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

புதிய நோயாளர் வார்ட்டை திறந்து வைத்து முதலாவது நோயாளரை பதிவுசெய்த ஜனாதிபதி அவர்கள் நோயாளர்களுடன் சுமுகமாக உரையாடியதன் பின்னர் 6 A வார்ட்டை அவதானிப்பதில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் பல் சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் குழுப் புகைப்படத்திலும் இணைந்துகொண்டார்.

சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி செயற்திட்டப் பணிப்பாளர் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ பிரதேச அமைப்பாளர் பிரசன்ன சோளங்க ஆரச்சி, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார, மருத்துவமனை பணிப்பாளர் திமுது ரத்நாயக்க மற்றும் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

1 (2) 2 (2) 3 (2) 5 (3) 6 (2)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்