04

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் 125 ஆவது ஆண்டு விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்றது.

நேற்று பிற்பகல் தொல்பொருள் திணைக்களத்திற்கு   விஜயம் செய்த ஜனாதிபதி திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் தொல்பொருள் ஆணையாளர் செனரத் பரணவிதாரன அவர்களின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னH தொல்பொருள் திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தாதுகோபுரத்தைத் திறந்துவைத்த ஜனாதிபதி அங்கு முதலாவது மலர் பூஜையையூம் செய்தார்.

தொல்பொருள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த துட்டுகெமுனு தாது கண்காட்சி மற்றும் தொல்பொருள்; கண்காட்சியை திறந்துவைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ‘அன்றும் இன்றும்’ என்ற தொல்பொருள் நினைவூ மலர் ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன்இ தொல்;பொருள் திணைக்களத்தின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த ஞாபகார்த்த முத்திரை மற்றும் கடித உறையூம் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதிக்கு விசேட நினைவூச் சின்னமும் இங்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதிஇ அரச சொத்துக்களை திருடுபவHகள் அடுத்த பிறப்பில் நாய்களாகஇ காகங்களாக பிறப்பதாக  நிசங்கமல்ல என்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கூற்றை ஜனாதிபதி அலுவலகம் முதல் அமைச்சர்களின் அலுவலகங்கள்  மற்றும் அரசாங்க அலுவலகங்களில் காட்சிப்படுத்துவது மிகவூம் சிறந்ததென கருதுவதாகக் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின்இ ஒரு தேசத்தின் வரலாற்றுக்கு சான்றாகவிருப்பது தொல்பொருட்களே என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். அதேபோன்று ஒரு நாட்டையூம் தேசத்தையூம் கட்டியெழுப்புவதற்கு இறந்தகாலத்தின் பழம் பெருமைகளைப் பற்றிப் பேசுவதுதோடு  மட்டுப்படுத்திக் கொள்ளாது அந்த இறந்தகால சிறப்புகளையூம்

மேன்மைகளையூம் எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குவதற்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த பல வருடங்களாக தொல்பொருள் திணைக்களத்தில் 42 முக்கிய பதவிகள் வெற்றிடமாகக் காணப்படுவதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக இங்கு  குறிப்பிட்ட ஜனாதிபதிஇ தொல்பொருள் திணைக்கள நடவடிக்கைகள் கடந்த காலத்தில் களங்கப்பட்டிருந்த நிலைமைகள் தொடர்பிலும் கடந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறானபோதும் புதிய அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்திற்குத் தேவையான எல்லா வகையான மனிதவள மற்றும் பௌதீகவள உதவிகளைப் பெற்றுக்கொடுத்து நவீன தொழிநுட்பத்துடன் முன்னேறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய தவூல்தென ஞானீஸ்ஸர தேரர்இ சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர்இ சித்துல்பௌவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய மெட்டரம்ப ஹேமரத்ன தேரர்இ களனி ரஜமஹாவிஹாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரகித்த தேரர் அமைச்சர் நந்தமித்த ஏக்கநாயக்கஇ ஏ எச் எம் பௌசிஇ ஏ எல் எம் ஹிஸ்புல்;லா ஆகியோரும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கிரிசான்த குணவர்த்தனஇ தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க ஆகியோரும் இங்கு பிரசன்னமாகி இருந்தனர்.

21 19 17 16 14 12 11 10 08 06 04 03 02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்