03

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி பயிற்சிகளை பெறவேண்டியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அவ்வாறான கட்டணம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (19) பிற்பகல் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச நிபுணத்துவ தின நிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இலவச கல்வியை பலப்படுத்துவதற்கும், நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழிற்பயிற்சியை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதுடன், அதற்கான முதலீடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு விடுத்த முன்மொழிவிற்கமைய ஜூலை 15 ஆம் திகதி சர்வதேச நிபுணத்துவ தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

 

சர்வதேச நிபுணத்துவ தினத்தோடு இணைந்ததாக தொழிற்பயிற்சி பெறும் பிள்ளைகளுக்காக மாகாண, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்கள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

 

அத்துடன், இலங்கை நிபுணத்துவ இணையதளம் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இலங்கை நிபுணத்துவ செயலகத்தை நிறுவுதல் தொடர்பான ஆவணங்கள் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

தேசிய நிபுணத்துவ ஊழிய வளத்தை நாட்டுக்கு உரித்தாக்குவதற்காக இலங்கை நிபுணத்துவ Ten+one செயற்திட்டமும் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் பீ.ரணேபுர மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
01

02

04

05

06

07

08

09

10

11

12

13

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்