01

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) முற்பகல் நீர்கொழும்பு மாவட்ட   மருத்துவமனைக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

 

அங்கு மருத்துவமனைச் செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி அவர்கள், விசேட டெங்கு சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான மருத்துவ நிபுணருடன் கலந்துரையாடினார்.

 

நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்தமையால் தற்போது மருத்துவமனையின் டெங்கு பிரிவில் நெருக்கடி நிலவுகிறது. அந்த பிரிவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

அத்துடன் மருத்துவமனையின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி அவர்கள் அதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியதுடன், சுகாதார அமைச்சுக்குப் புறம்பாக உள்ளுராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தனது நேரடி பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

அதன்பின்னர் டெங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று செயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் கண்காணித்ததுடன் நோயாளர்களுடனும் உரையாடினார்.

 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.

05

02

03

04

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்