01 (8)

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (26) பிற்பகல் மகாவலி அதிகாரசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

 

தற்போது அமுல்படுத்தப்படும் மற்றும் அமுல்படுத்தப்படவுள்ள நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

காலநிலை மாற்றம் மற்றும் கடந்த ஆண்டுகளின் மழைவீழ்ச்சி தொடர்பில் உரிய ஆய்வை மேற்கொண்டு நீர்ப்பாசன திட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானமெடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

பிரதி அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, துஸ்மந்த மித்ரபால, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

02 (9)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்