5

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள்

01.  கௌரவ ரவீந்திர சமவீர     –      தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்

                                     அமைச்சர்

02.  கௌரவ வி.ராதாகிருஷ்ணன் –      விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

பிரதியமைச்சர்

 

03.  கௌரவ அப்துல்லாஹ் மஹ்ரூப்   – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை

                                      பிரதியமைச்சர்

04.  இதனிடையே கௌரவ அமைச்சர் தயா கமகே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1

2

3

4

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்