04

ஒழுக்கம், பணிவு, நற்பண்புகள் உள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புத்தசாசனத்தின் உன்னதமான பதவிகளை ஏற்கின்ற மகா தேரர்கள் முன்னணி வகிப்பார்களென அரச தலைவரான தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா விஹாரையின் புதிய மகாநாயக்க தேரர் வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்சி மகாநாயக்க தேரர் அவர்களுக்கு அப்பதவிக்கான நியமனப்பத்திரத்தை வழங்கும் அரச வைபவம் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மணமண்டபத்தில் நடைபெற்றது.

அவ்வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி.

இன்று உலகில் பல நாடுகளில் பௌதிக வளங்களும் தொழில்நுட்பமும் எந்தளவூக்கு உயர்ந்த முன்னேற்றத்தைப் பெற்றிருந்தாலும் நமது நாட்டு மக்களிடம் உள்ள மனிதாபிமான பண்புகளை அம்மக்கள் மத்தியில் காண முடியாதுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் பௌத்த மதத்துடன் எமக்கு கிடைத்த அந்நன்மைகளை பாதுகாத்துக்கொண்டு எமது நாட்டை உலகத்தில் உள்ள மிகச் சிறந்த அரசாக முன்னெடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவூம் தெரிவித்தார்.

முன்னர் மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவிய பாரம்பரியங்களை நிறைவேற்றி ஜனாதிபதி அவர்கள் புதிய மகாநாயக்க தேரர் அவர்களுக்கு நியமனப்பத்திரத்தை வழங்கினார்.

அத்துடன் அஸ்கிரிய பீடத்தின் இரண்டு துணைத் தலைவர் பதவிகளுக்கு புதிதாக நியமனம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதுளை முத்தியாங்கனை ரஜமகா விஹாராதிபதி வண. வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன, பொலனறுவை சொலஸ்மஸ் ஸ்தானாதிபதி வண. வெண்டருவே உபாலி ஆகிய துணைத் தலைவர்களான இரு தேரர்களுக்கும் நியமனப் பத்திரங்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

மூன்று பீடங்களின் மகா தேரர்களும் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கஇ புத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்களும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்கள் உள்ளிட்ட பஸ்நாயக்க நிலமேமார்களும் உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் பலரும் இவ் வைபவத்தில் கலந்துகொண்டனர்.

15 14 13 11 10 09 07 02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்