12

மகாவலி எல் வலயத்திற்குட்பட்ட வெலிஓயா கிரிஇப்பன்வெவ நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் அதனை இன்று ஜனாதிபதி அவர்கள் மக்களின் பாவனைக்காக கையளித்ததுடன், நீர்த்தேக்கத்தில் பத்தாயிரம் மீன்குஞ்சுகளையும் விடுவித்தார்.
மகாவலி எல் வலயத்தின் கிரிஇப்பன்வெவ பிரதேசத்தில் ஜனகபுர பிரிவில் 8 மீற்றர் நீளமான மின்சார வேலியை நிர்மாணிப்பதற்காக 55 இலட்ச ரூபாய் பெறுமதியான காசோலையையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கினார்.
2440 ஏக்கர் அடிகள் கொள்ளளவுடைய கிரிஇப்பன்வெவ நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 900 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் 520 குடும்பங்களுக்கும் நீர் வழங்கப்படுகின்றது.
30 வருடங்களின் பின்னர் இக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன், இதற்காக 103 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

01

02

03

04

05

06

08

09

10

11

13

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்