02 (3)

பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவூடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து மத தத்துவங்களின் போதனையூம் அதுவாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று மாலை (07) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தேசிய இப்தார் நிகழ்வில் உரை நிகழ்த்தியபோது கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து இனங்களுக்கு இடையிலும் சமாதானத்தையூம் நல்லிணக்கத்தையூம் கட்டியெழுப்பி கூட்டொருமைப்பாட்டுடனும் பரஸ்பர புரிந்துணர்வூடனும் செயலாற்றுகின்ற இலங்கை நாடொன்றை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இத்தகைய மத வைபவத்தை அனைவரையூம் சேர்த்துக்கொண்டு கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையூம் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய மதத் தலைவர்களும் முழு நாட்டையூம் பிரதிநிதித்துவப்படுத்தி இஸ்லாமிய பக்தர்கள் பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அத்துடன் தேசிய நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டத்தை அவர்கள் பாராட்டினர்.

நாட்டின் சமாதானம், ஒற்றுமை என்பவற்றைப்போன்று தேசிய நல்லிணக்கத்திற்காகவூம் அவர்கள் ஆசீர்வதித்தனர்.

பிரதம அமைச்சர் ரணில் விக்கிரசிங்க, அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள், தூதர்கள் ஆகியோருடன் அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
06 (1) 05 (2) 03 (2)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்