01

“பொலன்னறுவை மன்னர் யுகம் முதல் ஜனாதிபதி யுகம் வரை” ஆய்வு நூலை பொலன்னறுவை மாணவர்களுக்கும் மக்களுக்கும் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) பொலன்னறுவையில் இடம்பெற்றது.

 

அந்நூலை பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றதுடன், அதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் அதே கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

 

பொலன்னறுவை நூலை பாடசாலை மாணவர்களுக்கு கையளிப்பதனை அடையாளப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் சில பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் நூலினை வழங்கினார்.

 

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இந்நிகழ்வின் பிரதான உரையை ஆற்றினார்.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டைய பொலன்னறுவை நகரின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் பிரபல கலைஞர்களின் பங்குபற்றலில் விசேட கலை நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றது.

 

இலங்கை வரலாற்றில் பொலன்னறுவை நகரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. 166 வருடங்களாக காணப்பட்ட பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் மின்னேரிய விவசாயக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன், மக்கள் மீண்டும் அதிகளவில் அங்கு குடியேறத் தொடங்கினர். மேலும் இப்பிரதேசமானது வளமான நெல் உற்பத்தியைக் கொண்ட பூமியாகவும் வரலாற்றுப் பெறுமதிமிக்க பிரதேசமாகவும் விளங்குகின்றது.

இப் பிரதேசம் சார்ந்ததாக கட்டியெழுப்பப்பட்ட வரலாறு மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட முறையான அபிவிருத்தி பற்றிய விபரங்கள் பொலன்னறுவை ஆய்வு நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய அறிவினை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, கடந்த காலத்துடன் இணைந்த நிகழ்காலத்துடன் போட்டியிட்டு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

16

17

18

19

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்