12

பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பொசன் அன்னதானம் வழங்குதல் 59வது தடவையாகவும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுவதுடன், அதன் இரண்டாம் நாள் நிகழ்வுகளை இன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்தார்.

 

மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்த பொசன் மாத பௌர்ணமி தினத்தை கொண்டாடும் வகையில் வரலாற்று முக்கியத்துவமிக்க புண்ணிய தலங்களுக்கு வருகைத் தரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்காக பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் வருடாந்தம் இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

 

நேற்று நண்பகல் ஆரம்பமான அன்னதானம் வழங்குதல் நேற்று இரவும் தொடர்ச்சியாக இடம்பெற்றதோடு, இன்றும் நண்பகல், இரவு என இரு வேளைகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை புனித பூமிக்கு வருகைதரும் பெருமளவிலான மக்கள் நேற்றைய தினத்தைப் போன்றே இன்றும் அன்னதான நிகழ்வுக்கு வருகை தந்தனர்.

 

அன்னதானத்திற்கு வருகை தந்த பொதுமக்களுடன் ஜனாதிபதி அவர்கள் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களது நலன் விசாரித்தார்.

 

இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை பொசன் மகா பெரஹர இன்று இரவு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பொலன்னறுவை வட்டதாதே அருகில் ஆரம்பமாகவுள்ளது.

 

01

02

03

04

05

06

07

08

10

12

13

14

15

16

17

18

19

20

21

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்