5 (1)

ஆரோக்கியமானதொரு மனிதவளத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ரஜரட நவோதய – எழுச்சிபெறும் பொலன்னறுவை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.

பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் வைத்தியசாலை பணிக்குழாத்திற்கு பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன்> இந்த அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துவைத்தார்.

ரூபா 900 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் மூன்று மாடி வாட்டுக் கட்டிடத்தொகுதிக்கு அடிக்கல் நடுதல்> உடல் நல மத்தியநிலையத்திற்கான அடிக்கல் நடுதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி> இலவச சுகாதார சேவையைப் பலப்படுத்தும் வகையில் பங்களிப்புச் செய்துவரும் அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களையும் பாராட்டியதுடன்> நாட்டின் இலவச சுகாதாரச் சேவையைப் பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக சுகாதாரத் தாபனத்தின் பிராந்திய பதவியொன்றுக்காக செல்லும் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹீபாலவின் சேவைகளைப் பாராட்டி விசேட நினைவுச் சின்னத்தையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார். வைத்தியசாலைக்கு விஜயம் செய்தமையை நினைவுகூறும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கும் ஒரு விசேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

சிறில் தர்மவர்தன மன்றத்தினால் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சுகாதாரத் துறை பிரதியமைச்சர் பைசல் காசிம்> வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்