04

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பின் பேரில் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10 ஜீப் வண்டிகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இலங்கைக்கான சீன தூதுவர் Chang Xueyuan அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொலிஸ் திணைக்களத்தை தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்ததைத் தொடர்ந்து அத்திணைக்களத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் திணைக்களத்திற்கும் ஜீப் வண்டியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ் ஜனாதிபதி அவர்களின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கத்தினால் இந்த ஜீப் வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

 

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

04

05

06

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்