03

உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாத தியாகமும், மனிதாபிமானமும் இலங்கை மக்களிடையே காணப்படுவதற்கு பௌத்த கோட்பாட்டு பின்னணியிலான சமூக சூழலே காரணமாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது அன்பு, கருணை மற்றும் தியாக  சிந்தையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பக் கண்ணீருடன் இணைந்து அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டதற்கு பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான உன்னத மனிதாபிமான பண்புகள் இலங்கை மக்களின் இதயங்களில் நிறைந்துள்ளமையே காரணமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (06) பிற்பகல் பெந்தர விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தபிரானின் திருவுருவ சிலையை திறந்து வைத்தல் மற்றும் வண. பெந்தர ஜினாநந்த தேரருக்கு சங்கநாயக்கர் பதவியை வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெந்தர நகருக்கு பெரும் ஆசீர்வாதத்தை தரும், உள்நாட்டு, வெளிநாட்டு மக்களை கவரக்கூடியவாறு பெந்தர நகரில் நிர்மாணிக்கப்பட்டள்ள புத்தபிரானின் திருவுருவ சிலையின் நினைவு பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து, வழிபாட்டுக்காக திறந்து வைத்தார்.

வண.பெந்தர ஜினாநந்த தேரரின் சமய, சமூக சேவைகளைப் பாராட்டி காலி கோரளையின் பிரதம சங்கநாயக்கர் பதவி வழங்கப்பட்டது. தேரருக்கான நினைவுப் பரிசு ஒன்றும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

பேராசிரியர் வண. கொடபிற்றியே ஸ்ரீ ராகுல தேரர் ஆசீர்வாத உரை ஆற்றினார். பிரதேச பௌத்த தேரர்கள், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, மகிந்த அமரவீர, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பக்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

13

01

02

08

04

05

09

12

10

11

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்