01 (1)

பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றை எழுத்துடன் மட்டுப்படுத்தாமல் பௌத்த மதத்தை போஷிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட  புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மல்வத்த பிரிவின் அனுநாயக்கர் வணக்கத்துக்குரிய நியன்கொட விஜேசிறி தேரரருடன் 500 பௌத்த துறவியரின் பங்கேற்புடன் வழிபாடு இடம்பெற்றது.

150 ஆண்டுகள் பழமையான விகாரையின் புராதன பெறுமானங்களுடன் விகாரையாக மட்டுமன்றி இது பிரிவெனா கல்வி நிறுவனமாகவாகவும் பிரபலமான புண்ணிய பூமியாகும்.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் வணக்கத்துக்குரிய தேரர் திருவுருவங்களை திறந்து வைக்க ஜனாதிபதி அவர்கள் நினைவு பலகையை திரைநீக்கம் செய்ததுடன், பஞ்ச மகா தேவாலயத்தை திறந்து வைத்து, நினைவுப் பலகையையும் திறந்து வைத்தார்.

ஜனாதிபதியின் விஜயத்தின் ஞாபகார்த்தமாக சந்தன மரமொன்று நடப்பட்டது.

அதன் பின்னர் சிலைகளை நிர்மாணிப்பதற்காக நிதியுதவி செய்த கொடைவள்ளல் கெமுணு ஜயசூரியா அவர்களுக்கு நினைவுப் பரிசு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

விகாராதிபதி வணக்கத்துக்குரிய மாம்பிற்ற ஹேமாலோக தேரருக்கு ஜனாதிபதி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். தேரரும் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

மல்வத்த பிரிவின் அனுநாயக்கர் வணக்கத்துக்குரிய நியன்கொட விஜேசிறி தேரரருக்கு ஜனாதிபதி அவர்கள் பூஜைப் பொருட்களை காணிக்கை அளித்தார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, முதலமைச்சர் மகிபால ஹேரத், முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, ராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாஸ, பிரதி அமைச்சர் துஸ்மந்த மித்ரபால, பாராளுமன்ற உறுப்பினர் துஷித விஜேமான்ன, மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷ சியம்பலாபிட்டிய, ஸ்ரீ.சு.கட்சியின் தெதிகம தொகுதி அமைப்பாளர் கித்சிறி விஜேதுங்க ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச அடியார்களும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.

02 (3) 03 (2) 05 (2) 08 (2) 09 (1)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்