04

வெளிக்கள அதிகாரிகளுக்கு விரிவான மக்கள் சேவையை ஆற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி, அவர்களது வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கிராமிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவர்களின் கடமையாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (22) முற்பகல் பொலன்னறுவை நிஷங்கமல்லபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பணியகங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

வினைத்திறன்மிக்க அரச சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 180 உத்தியோகபூர்வ பணியகங்கள் மற்றும் 02 புகையிரத உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 

தமன்கடுவை, திம்புலாகல, வெலிகந்த, லங்காபுர, மெதிரிகிரிய, ஹிங்குரக்கொட, எலஹெர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த உத்தியோகபூர்வ பணியகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கிராம சேவகர் பிரிவுகளில் சேவைபுரியும் கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் ஆகிய அரசாங்க அதிகாரிகளின் சேவைகளை ஒரே இடத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வசதிகள் உத்தியோகபூர்வ பணியகங்களின்மூலம் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 30 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

 

180 உத்தியோகபூர்வ பணியகங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக பொலன்னறுவை ரவும் வீதி அருகில் அமைந்துள்ள பெந்திவெவ மற்றும் நிஷங்கமல்லபுர ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பணியகங்களை ஜனாதிபதி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

 

அத்துடன், ஏனைய உத்தியோகபூர்வ பணியகங்கள் கட்சி, எதிர்க்கட்சி, அரசியல் பிரமுகர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

 

விஜேதாச ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, டிலான் பெரேரா, எஸ்பி.நாவின்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய லசந்த அழகியவண்ண, வீரகுமார திசாநாயக்க, திலங்க சுமதிபால, துனேஷ் கன்கந்த, துஷ்மந்த மித்ரபால, அப்துல் காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், இசுற தேவப்பிரிய ஆகிய அரசியல் பிரதிநிதிகளும் ஆளுநர்களாகிய பேசல ஜயரட்ன, தம்ம திசாநாயக்க, சுரேன் ராகவன், ஷான் விஜேலால் த சில்வா, ரஜித்த கீர்த்தி தென்னகோன், ஏ.ஜே.எம்.முஸம்மில், மைத்ரி குணரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

அத்துடன் புகையிரத உத்தியோகத்தர்களுக்காக சகல வசதிகளுடன் பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதிகள் இரண்டையும் ஜனாதிபதி அவர்கள் இன்று திறந்து வைத்ததுடன், அதற்காக 485 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

 

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்