5

முன்னணி திரைப்பட நடிகை சுவர்ணா மல்லவாரச்சியின் திரைப்பட வாழ்வுக்கு 50 வருடங்கள் நிறைவுக்கான பாராட்டு விழா கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனீ திரையரங்கில் இடம்பெற்றது.

 

தனது 50 வருட திரைப்பட வாழ்வில் சுவர்ணா மல்லவாரச்சி இலங்கை திரைப்படத் துறைக்கு செய்த சேவையைப் பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் விசேட விருது வழங்கப்பட்டது.

 

‘சினிமாவில் பெண் சுவர்ணா மல்லவாரச்சி 50 வருட திரைப்படப் புகழ்’ என்ற நினைவு மலர் சுவர்ணா மல்லவாரச்சியினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சுவர்ணா மல்லவாரச்சி இலங்கை இரசிகர்களுக்கு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் இரசிகர்களின் மனங்களை வென்ற ஆளுமையாவார் எனத் தெரிவித்ததுடன், இலங்கையின் திரைப்படத்துறை முன்னேற்றத்திற்காக மேலும் சிறப்பான சேவையை வழங்க அவருக்கு தனது நல்லாசிகளையும் தெரிவித்தார்.

 

ஊடகத் துறை  அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

6 3 4 2 7 9 8

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்