04

எம்மை விட்டுச் செல்கின்ற எங்களுக்கே உரித்தான உணவு கலாசாரத்தை மீண்டும் நாட்டில் பிரபல்யப்படுத்தி முறையான உள்ளூர் உணவு உற்பத்தி செயற்பாட்டுக்கு நாட்டை கொண்டு செல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பயிரிடக்கூடிய, இருப்பினும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற அனைத்து உணவுப் பொருட்களையூம் நிறுத்திவிட்டு நாட்டை தன்னிறைவூள்ள பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளூர் உணவு உற்பத்தி நிகழ்ச்சி தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருகின்ற உணவுப் பொருட்களுக்காக வருடம் ஒன்றுக்கு நாம் சுமார் 154 பில்லியன் ரூபா பணத்தைச் செலவிடுகின்றோம். அவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற 38 உணவுப் பொருட்களில் பருப்பு, கடலை, ஆப்பிள் உள்ளிட்ட நான்கு உணவுப் பொருட்களை தவிர்த்து ஏனைய அனைத்து உணவுப் பொருட்களையூம் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும். சரியான திட்டத்துடன் இந்நோக்கத்தை நாம் அடைய வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டு இந்நிகழ்ச்சித் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்தார். அத்தோடு 3 ஆண்டு கருத்திட்டமாக இதை செயற்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி ஆலோசனைக் கூறினார்.  அதன்போது அனைவரும் ஒன்றாக கலந்துரையாடி சரியான திட்டங்களை தயாரிக்க வேண்டுமெனவும் அதற்கு பொருத்தமான காலம் இதுதான் எனவூம் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்தில் அரச அதிகாரிகளுக்கு இப்பணிகளில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புக் கிட்டி இருக்கின்றதெனவூம் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகவே அத்திட்டத்தை மூன்று வாரங்களுக்குள் தமக்கு சமர்ப்பிக்கும்படி ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், இதன்போது இத்துறையில் சிறந்த அறிவுள்ள அனைவரினதும் கருத்துக்களையூம் முன்மொழிவூகளையூம் கவனத்தில் எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம்பற்றியூம் தெளிவூபடுத்தினார்.

தன்னிறைவூள்ள நாடொன்றை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாயிகள் முகம் கொடுத்துள்ள சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வு வழங்க வேண்டும். விவசாயிகளுக்காக உரிய அனைத்து வசதிகளையூம் குறைவற நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவூம் ஜனாதிபதி கூறினார்.

மண்ணை சிறந்த முறையில் பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்வது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பயிரிடப்படாத காணிகளை கட்டாயமாக பயிர் செய்வதற்கு செயல்முறை ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

உற்பத்தி செயற்பாடுகளைப்போன்று விவசாயிகளை ஊக்குவிக்கின்ற வேலைத்திட்டத்தின் அவசியம்பற்றியூம் இதன்போது ஜனாதிபதி விளக்கினார். அத்துடன் தேசிய ரீதியாக சிறந்த விவசாயியை தெரிவூ செய்து ஜனாதிபதி விருது வழங்குதல் மற்றும் விவசாய கலாசாரத்துடன் இருக்கின்ற மக்களின் அறிவை அடையாளம் கண்டு விஞ்ஞான அடிப்படையிலும் ஏர் ப+ட்டு விழா போன்ற மாபெரும் கலாசார மரபுரிமைகளுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம்பற்றியூம் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அமைச்சு செயலாளர்களும் விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
04

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்