03

களுத்துறை மகளிர் கல்லூரியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (26) கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

75 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்ட களுத்துறை மகளிர் கல்லூரி நாட்டிற்கு பாபெரும் மனிதவளத்தை பெற்றுத் தந்த ஒரு பாடசாலையாக வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

இன்று பிற்பகல் கல்லூரிக்கு விஜயம்செய்த ஜனாதிபதி அவர்கள் மாணவிகளால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டார்.

கல்லூரிக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த மண்டபம் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்குமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.

கல்விக் கண்’காட்சியைத் திறந்துவைத்து அங்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், மாணவிகளுடன் நட்புறவுடன் உரையாடினார்.

வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தற்போதைய அரசு மாணவர்களின் கல்விக்காக எந்தவொரு அரசாங்கத்தினாலும் ஒதுக்கப்படாத அளவு நிதியினை தேசிய வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று முழு உலகிலும் கல்வியானது நவீன தொழில்நுட்பத்தினூடே கைகோர்த்து புதியதொரு பாதையில் செல்லவாரம்பித்துள்ள இவ் வேளையில் இலங்கையில் வாழும் சிறார்களை எச்சந்தர்ப்பத்திலும் பின்னடைவதற்கு இடமளிக்காது அவர்களை அறிவு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் வளம்பெறச் செய்தல் அரசின் நோக்கமாகுமென ஜனாதிபதி அவர்கள் இங்கு குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரும் மாகாணத்தின் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01 02 05 07 10 11 14 16 17 18 20

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்