12

பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (12) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

மகா சங்கத்தினரின் பிரித் பராயனத்திற்கு மத்தியில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அக்கட்டிடத்தின் 13ஆவது மாடியில் இடம்பெற்ற புதிய சபை அமர்வுக்கு தலைமை வகித்து, அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மேல் மாகாண சபையின் அனைத்து அமைச்சுகள்  மற்றும் நிறுவனங்களை ஒரே கட்டிடத்தின் கீழ் கொண்டுவந்து விரிவாகவும் வினைத்திறன்மிக்க வகையிலும் மக்கள் சேவையை வழங்கும் நோக்குடன் அனைத்து வசதிகளையும் கொண்டதாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இப்புதிய கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மேல் மாகாண செயலாளர் பிரதீப் யசரத் ஆகியோர் உள்ளிட்ட மேல் மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

DCIM100MEDIADJI_0007.JPG

DCIM100MEDIADJI_0010.JPG

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்