09

மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை தேசத்திற்கு வழங்கக்கிடைத்தமை தனது பதவிக்காலத்தில் நாட்டின் விவசாய சமூகத்திற்காக மேற்கொள்ளக்கிடைத்த ஒரு யுகப் பணியாக தான் கருதுவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (06) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொலன்னறுவையிலுள்ள பல பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் இன்று மாணவர்களிடம் கையளித்தார்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 998 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை கல்வியியற் கல்லூரியின் மூன்று மாடி ஆசிரியர் தங்குமிட கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

 

அதனைத்தொடர்ந்து 177 இலட்ச ரூபா செலவில் பொலன்னறுவை அல்மினா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

 

அதனைத்தொடர்ந்து 63 இலட்ச ரூபா செலவில் விஜயபாகுபுர கனிஷ்ட வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

 

இதேநேரம் ஹிங்குரக்கொட நாகபொக்குன கனிஷ்ட வித்தியாலத்தில் 73 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடத்தை வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மாணவர்களிடம் கையளித்தார்.

 

73 இலட்ச ரூபா செலவில் பொலன்னறுவை ஹதமுன ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடம் மற்றும் 230 இலட்ச ரூபா செலவில் ஹிங்குரக்கொட ரஜரட்ட கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடத்தையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 69 இலட்ச ரூபா செலவில் மெதிரிகிரிய மஹிந்த மகா வித்தியாலயத்தில் 04 கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, அந்த வகுப்பறைக் கட்டிடமும் ஜனாதிபதி அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

இங்கு மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், ஒரு அரசாங்கம் நாட்டின் எதிர்காலத்திற்காக செய்யக்கூடிய அதிகபட்ச முதலீடு பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுத்து, நாட்டில் அதிகளவிலான கல்விமான்களை உருவாக்குவதாகும் எனக் குறிப்பிட்டார்.

 

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

 

01

02

03

04

05

06

07

08

10

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்