Default Banner

நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேலும் பல சதோச விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதலாவது விற்பனை நிலையம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இன்று (28) பிற்பகல் கொஹுவல நகரில் திறந்து வைக்கப்பட்டது.

அதனோடிணைந்ததாக இன்று 52 லங்கா சதோச விற்பனை நிலையங்கள் நாடுபூராவும் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கமைய தற்போது நாடுமுழுவதும் 380 லங்கா சதோச விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டின் இறுதியளவில் அதனை 500 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கொஹுவல புதிய சதோச விற்பனை நிலையத்தை இன்று திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் மனோ கணேசன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், லங்கா சதோச தலைவர் ரி.எம்.டி.தென்னக்கோன்  உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்