01

சியாமோபாலி வங்ச மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் களுத்துறை பிரதேச பிரதான சங்க நாயக்கர் பதவியளிக்கபட்ட றைகம் சல்பிட்ட கோரளையின் உப சங்க நாயக்கர் அதி.வண. போபிட்டியே தம்மீஸ்ஸர நாயக்க தேரருக்கு சான்றுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றலில் (04) பிற்பகல் கண்டி மல்வத்த விகாரையில் இடம்பெற்றது.

1961ஆம் ஆண்டு மத்துகமயில் துறவறம் ஏற்ற தேரர் அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாதுவ பிரதேசத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் வெளிநாடுகளிலும் பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுள்ளார்.

இலங்கை பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக வாதுவ சமுத்திராராம விகாரையை நிர்மாணித்தமை, சிறி மகாமிஹிந்து பிரிவெனாவை ஆரம்பித்து அதனை நடாத்தி செல்கின்றமை, பிக்கு மாணவர்கள் ஐம்பது பேருக்கு உதவியளித்தல் ஆகியன வாதுவ பிரதேசத்தின் பௌத்த மத மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகளுள் முக்கியமானவை.

தர்மவிஜய அமைப்பின் ஆலோசகர், தர்மபால மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபர், சீவலி அறநெறிப் பாடசாலையின் ஸ்தாபகர், ஐக்கிய நாடுகளின் பிக்குகள் முன்னணி தலைவர் மற்றும் கல்வி அமைச்சின் சமய ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து சமூகத்திற்கும் சமயத்திற்கும் தேரர் அவர்கள் அரும்பணியாற்றி வருகின்றார்.

நேற்று பிற்பகல் மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் மல்வத்து பிரிவின் மகா நாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை தரிசித்து, அவரின் சுகநலன்களை விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் புதிய சங்க நாயக்கருக்கு மல்வத்து மகாநாயக்க தேரர் சான்றுப்பத்திரத்தை வழங்கினார்.

சோமாவதி ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. பகமன ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரகித்த தேரர், வண. கோணதுபே குணாநந்த நாயக்க தேரர், உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆளுநர் மைத்ரி குணரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்திரளான பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02

03

04

05

06

07

08

09

10

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்