3

சுயமாக எழுந்திருக்க முயற்சிக்கும் கலைஞர்களுக்கு பலம் சேர்க்கும்வகையில் கொழும்பு ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திறந்த காட்சிப் பலகைகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நேற்று (20) பிற்பகல் கலைஞர்களிடம் கையளிக்கப்பட்டன.

 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு, கொழும்பு நகரசபை மற்றும் ‘அவகாசயே அபி’ வீதிக் கலைஞர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

ஒவ்வொரு கலைஞருக்காகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள திறந்த காட்சிப் பலகைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

 

இச்சங்கத்தைச் சேர்ந்த கலைஞர் லக்ஷ்மன் திசாநாயக்கவினால் வரையப்பட்ட ஜனாதிபதி அவர்களின் உருவப்படத்தை சங்கத்தின் தலைவர் ஏ.சி.நுவன் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

 

வீதிக் கலைஞர்கள் தொடர்பில் எழுதப்பட்ட நூலொன்று இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஜெனரல் மல்ராஜ் பீ கிரியெல்ல அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

அமைச்சர் பைஸர் முஸ்தபா, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கோட்டாபே ஜயரத்ன மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1

2

3

4

5

6

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்