09 (19)

 

பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டில் இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இவற்றில் இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மையை உச்சளவில் பேணுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

எலஹர பிரதேச செயலாளர் அலுவலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (04) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

 

ஊழல் மோசடியை எதிர்த்து தான் கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அரசாங்கத்திலும் எவ்வித அரசியல் பேதங்களுமின்றி தவறிழைக்கின்றவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதையும் தண்டனை வழங்குதையும்  நல்லாட்சியில் இருக்க வேண்டிய பிரதான பண்பாக கருதி செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

அபிவிருத்தி நடவடிக்கைகளில் சில தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சில அதிகாரிகள் பின்வாங்கும் நிலை காணப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது பொறுப்புக்களை நேர்மையாகவும் உரிய முறையிலும் நிறைவேற்றுவதற்கு எந்தவொரு அரசாங்க அதிகாரியும் பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

 

”எழுச்சிபெரும் பொலன்னறுவை” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எலஹர – பக்கமூன வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் பொது மக்களிடமும் மாணவர்களிடமும் கையளித்தார்.

 

பக்கமூன மகாசென் மத்திய மகா வித்தியாலயத்தில் 168 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 2 தொழில்நுட்ப பிரிவுகள் மற்றும் 8 வகுப்பறைகளைக் கொண்ட புதிய மூன்று மாடி கட்டிடத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

 

புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடி கல்லூரியின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலொன்னே, எலஹர பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அமரவங்ச மொஹொட்டி மற்றும் பாடசாலை அதிபர் காமினி சமரகோன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து 900 இலட்சம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள எலஹர பிரதேச செயலாளர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்ததுடன், அங்கு கடமைபுரியும் ஊழியர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

 

எலஹர தொகுதியில் 57 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. சில காணி உறுதிகளை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

 

கடந்த சில தசாப்தங்களாக பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெற்று வந்த அபிவிருத்தி பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 2018 ஆம் ஆண்டாகும்போது மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்துறைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 242 பாடசாலைகளில் தற்போது சுமார் 150 பாடசாலைகளில் முப்படையினரின் பங்களிப்புடன் புதிய கட்டிடங்கள் அமைத்தல் உட்பட புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இன்னும் சில நாட்களில் சுமார் 100 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 100 புதிய கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

சங்கைக்குரிய மாதொல சோமானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலொன்னே, எலஹர பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அமரவங்ச மொஹோட்டிகே உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இதே நேரம் கோட்டபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 6 வகுப்பறைகளைக் கொண்ட புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார். இக்கட்டிடத்திற்காக 84 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து புதிய வகுப்பறையில் இடம்பெற்ற நுண்கலை பாடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

 

ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக் கன்று ஒன்று நடப்பட்டதுடன், கல்லூரியின் ஆரம்ப மாணவரான டப்ளியு.எம்.காமினி விஜேகோனுக்கும் கடந்த 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஏ.டப்ளியு.சீ.ஓதாத அம்பவத்த என்ற மாணவருக்கும் விருதுகளை வழங்கினார்.

 

மேலும் புதிய பாடசாலை கட்டிடத்தை நிர்மாணித்த விமானப் படை அணியுடனும் பாடசாலை அதிபர் டீ.எல்.ஜே. குணசேகர உள்ளிட்ட ஆசிரியர் குழாமுடனும் புகைப்படத்திற்கு தோற்றினார்.

 

பல்வேறு அபிவிருத்தித் துறைகளின் கீழ் எலஹர-பக்கமூன பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் பெறுமதி சுமார் 3,500 இலட்சம் ரூபாவாகும். இதில் தற்போது 12,743 இலட்சம் ரூபா பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முதலிடப்பட்டுள்ளது.
02 (47)

03 (35)

04 (33)

05 (29)

06 (26)

10 (32)

12 (22)

01 (46)

02 (48)

03 (36)

04 (34)

09 (20)

12 (23)

14 (17)

01 (47)

02 (49)

03 (37)

04 (35)

05 (30)

06 (27)

09 (21)

10 (33)

11 (24)

12 (24)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்