05

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (28) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்தனர்.

டியுனீசியா, ஸ்பெயின் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும், சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகரும் இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

  1. Mr. Nejmeddine Lakhal – Ambassador – designate of the Republic of Tunisia
  2. Mr. Jose Ramon Baranano Fernandez – Ambassador – designate of Spain
  3. Mr. Archil Dzuliashvil – Ambassador –  designate of Georgia
  4. Mr. Conrad Mederic – High Commissioner – designate of the Republic of Seychelles​​

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்