02 (5)

18 ஆவது ஆசிய பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ரஷ்யா செல்லவுள்ள இலங்கை மாணவ குழுவினர், இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தனர்.

இக்குழுவைச் சேர்ந்த குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் மே.டீ.எம்.அமாயா தர்மசிறி, மாத்தறை ராஹூல கல்லூரியின் ஆர்.பீ.நிசல் புன்சர, காலி ரிச்மன்ட் கல்லூரியின் யூ.பி.சதுர ஜயசங்க, கொழும்பு றோயல் கல்லூரியின் எம்.பீ.எஸ்.டிமல் தனுக்க, ஏ.கே.ஏ.ரன்துல,  திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் மொஹமட் அப்லால் மொஹமட் அபாம், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் டி.எம்.எஸ்.சமரகோன், குருணாகல் மலியதேவ கல்லூரியின் பீ.ஜீ.எஸ்.சத்துரங்க பண்டார ஆகிய மாணவ, மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பயணச்செலவு கொடுப்பனவை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

மே மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்பதாம் திகதி வரை ரஷ்யாவின் சைபீரியா மாநிலத்தில் Yakutsk பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள போட்டியில் 22 ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்த மாணவ குழுவினர் ரஷ்யாவிலிருந்து Yakutsk பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான விமான பயண வசதிகளை வழங்குமாறு ரஷ்ய தூதரகத்துக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், இலங்கை சர்வதேச பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.டீ.ரோசா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
01 (3)

03 (3)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்