imd

நாட்டின் அனைத்து சவால்களையும் சமாளித்து தாய்நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய ஒரு தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இந்த நாட்டின் மக்கள் பார்க்கிறார்கள் என களனி பல்கலைக்கழக அதிபர். கலாநிதி வலமிதியே குசலதம்ம தேரர் கூறினார். ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) வித்யாலங்கா பிரிவேனாவுக்குச் சென்று வளாகத்தில் உள்ள நினைவுச்சின்ன சன்னதிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், ஜனாதிபதி அவர்கள் வணக்கத்துக்குரிய . வலமிதியே குசலதம்ம தேரர் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக அதிபர் வணக்கத்துக்குரிய . பேராசிரியர் கும்புகுமுவே வஜிரா…

08

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால், சீரற்ற காலநிலை மாற்றங்களின் காரணமாக ஏற்படும் வெள்ளபெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடைபெறும் காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள்நலன் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக  மேற்கொள்ளுமாறு அரச அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளோடு இணைந்து அதிக மழைவீழ்ச்ச்சியின் காரணமாக வெள்ளம், மண்சரிவு, மற்றும் பாறை வீழ்தல் போன்ற அசம்பாவிதங்களின் போது உடனடி நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு அனைத்து அமைச்சு அதிகாரிகள். மாவட்ட செயலாளர்கள்…

09

இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். கனடா அரசு சார்பாக கனேடிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரத் துறை இயக்குனர் ஜெனரல் வு ஜியாங்காவோவும் இன்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்தார். வு ஜியாங்காவோ மக்கள் சீனக் குடியரசின் மாநில கவுன்சிலின் சிறப்பு பிரதிநிதி ஆவார், இவர் இதற்கு முன்னர் இலங்கைக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

vice president

திரு. மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Three New Secretaries appointed

மூன்று புதிய செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (19) நியமிக்கப்பட்டனர். கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு ஓசத சேனாநாயக்க அவர்கள் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

President Assums Duties

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சமயக் கிரியைகளை தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் பங்குபற்றினார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்த, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல,…

def

மகாநாயக்க தேரர், அநுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரே! கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் உள்ளிட்ட ஏனைய மதகுருமார்களே! இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே! கௌரவ பிரதமர் அவர்களே! நீதியரசர் அவர்களே! உயர்ஸ்தானிகர்களே! தூதுவர்களே! பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளே! இலங்கை குடி மக்களே! புத்த பெருமானின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க சுவர்ணமாலி மகாசேய புனிதஸ்தலத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றக் கிடைத்தமையை எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். இந்த…

New President

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன அவர்கள் வாசித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். அநுராதபுரம் ருவன்வெலிசேயவில்…

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்