Maithripala Sirisena - 01

மக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்குடனும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்”  தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்  அடுத்த இரண்டு மாதங்களில் நான்கு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.   அந்த வகையில் செப்டெம்பர் 23 – 28 பதுளை மாவட்டத்திலும் ஒக்டோபர் 04 – 09 அநுராதபுரம் மாவட்டத்திலும் ஒக்டோபர் 10 – 14 ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒக்டோபர் 16…

05

மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்றே சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அவர்கள் தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும்   மேற்கொள்ள வேண்டுமென இன்று (02) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல்…

15

  அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைப் பற்றிய உணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.  இன்று (31) பிற்பகல் கந்தளாய் மொரவெவ ஸ்ரீ இந்ராராம விகாரையில் புதிதாக நிர்மணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.   உன்னத வாரலாற்றைக் கொண்டுள்ள எமது நாடு அன்று விவசாயத்துறையில் வளம்பெற்று விளங்கியது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எதிர்காலத்திலும்…

18

ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடன், நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டுக்குகந்த அரசிலமைப்பு தேவையென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு வல்லுனர்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் அக்குழு வட மாகாண மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கிய அதேவேளை, தெற்கு வாழ்…

02

இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல்  திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (30) முற்பகல் வடமராட்சியில் இடம்பெற்றது.   யாழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.   யாழ் மாவட்டம் நீர்ப்பற்றாக்குறையினால் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மாவட்டமாகும். இந்த…

01

பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ”மைத்ரி ஆட்சி – நிலையான நாடு” மற்றும் ”பேண்தகு மீன்பிடி கைத்தொழிற் துறையின் ஊடாக மீன்பிடித் துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாக திகழ்தல்” எனும் எதிர்கால நோக்கிற்கமைய வடக்கு மீன்பிடித் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித் துறைமுகம் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித் துறைமுகமாகும். இதற்காக 12,600…

01

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகியன ஒன்றிணைந்து தரவுத் தொகுதிகளை தொடர்புபடுத்தி இந்த பொலிஸ் தொடர்பாடல் கட்டமைப்பினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து விலகிச் செல்பவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படுவதுடன்,…

02

இலங்கையர்களான நாம் மிக பழமை வாய்ந்த தத்துவ கோட்பாடுகளுக்கு உரிமைகோரும் அதேவேளை, அவற்றினூடாக போஷிக்கப்பட்ட சிறந்த கலாசாரத்தைக் கொண்ட அபிமானமிக்க மக்களாவோம் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   அக்கலாசாரத்தினால் உருவாக்கப்பட்ட மொழி, இலக்கணம், இலக்கியங்கள், வாஸ்த்து சாஸ்திரம் மற்றும் கலைப் படைப்புக்கள் ஆகியன உலக நாகரீகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அம்மொழிகளை பாதுகாப்பது இலங்கையர்களான எமது பொறுப்பாகுமென குறிப்பிட்டார்.   இன்று (29) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற இலங்கை பிரிவெனா…

12

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உலகளாவிய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய தரப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை விசேட நிபுணர்களின் பங்குபற்றலில் “சமகால பாதுகாப்பு தேவைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் மகத்தான பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. நிபுணத்துவ கலந்துரையாடலுக்கு தளம்…

Maithripala Sirisena - 01

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும் குறித்த விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அவர்கள், இவ்விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடையாகும் எனக் குறிப்பிட்டார்.   பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத்…

Page 2 of 318 1 2 3 4 318

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்