01

கம்போடிய பிரதமர் அலுவலக மற்றும் இஸ்லாமிய மத அலுவல்கள் அமைச்சர் ஓக்ன்ஹா டத்துக் கலாநிதி ஓத்ஸ்மேன் ஹசன் (Oknha Datuk Dr. othsman hassan) இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.   ஜனாதிபதி அவர்கள் அண்மையில் மேற்கொண்ட கம்போடியாவிற்கான விஜயத்தின்போது இணக்கப்பாடு எட்டப்பட்ட இருநாடுகளுக்குமிடையிலான கல்வி, சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.   கம்போடியாவிற்கான…

07

பாஷியன் தேரரின் சமய ஆய்வு பயணத்திற்கு 1620 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இடம்பெறும் “பாஷியன் தேரரின் தேச சஞ்சார பயணமும் பட்டுப்பாதையும்” தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்  தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.   சீன – இலங்கை நட்புறவின் அடையாளமாக கருதப்படும் பாஷியன் தேரரின் இலங்கைப் பயணம் கி.பி. 410ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கருதப்படுகின்றது.   தேரர்…

01

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு துறையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு தேசிய பாதுகாப்பிற்கு…

01 (17)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் (Jurgen Stock) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.   இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்….

Maithripala Sirisena - 01

இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் (27) முற்பகல் ஜனாதிபதிசெயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

5

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி என்ற வகையில் தான் நம்புவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்  தெரிவித்தார்.   அவ்வாறான சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே கல்விமான்கள் நிறைந்த சிறந்ததோர் நாடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (26) பிற்பகல் றுகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு…

2

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இடம்பெறும் விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (26) முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.   2017ஆம் ஆண்டு மருத்துவ, விவசாய மற்றும் பொறியியல் துறைகளில் உயர் தரம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட 240க்கும் மேற்பட்ட கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.   தேசிய ஆராய்ச்சி சபையினால் வருடாந்தம்…

01(1)

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.   இலங்கை கிரிகெட் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.   இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக கிரிகெட் சபையின் தலைவருக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கிரிகெட் போட்டிகளை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.   பாராளுமன்ற…

Maithripala Sirisena - 01

பேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டிட நிர்மாணத்துறையின் தேவை முதன்மையானதாக காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   இன்று (23) முற்பகல் “Construct – 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   தேசிய நிர்மாணத்துறை சங்கத்தினால் 19வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஓகஸ்ட் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தொடர்ந்து கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி…

06

இலங்கை கடற்படையின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக சீனக் குடியரசினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பீ-625 கப்பல் (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை வளாகத்தில் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டது. புதிய கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் நலீந்திர ஜயசிங்கவிடம் கப்பலை கையளிப்பதற்கான சான்றுப்பத்திரங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படைக் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகையையும்…

Page 3 of 318 1 2 3 4 5 318

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்