01

ஏப்ரில் 7ம் திகதி கொண்டாடப்படும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பின் இலங்கைக் கிளை ‘உணவுப் பாதுகாப்பு’ எனும் தொனிப் பொருளின் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

05

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பூடான் பிரதமர் ஷெரிங் டொப்கே மற்றும் தூதுக்குழுவினருக்கு நேற்று (10) இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார்.

flag

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று பிற்பகல் பாகிஸ்தான் பயணமாகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபின் அழைப்பை ஏற்று மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதிஇ பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் ஆகியோர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே இருந்துவரும் இருதரப்பு உறவுகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதாய் அமையும்.

06

இயேசுவின் உயிர்த்தெழுகையினூடாக மரணத்தை வெற்றிகொண்டதைக் குறிக்கும் உயிர்ப்புவிழா கிறிஸ்தவர்களின் மிக முக்கியமானதொரு பண்டிகையாகும். உயிர்ப்புவிழாக் கொண்டாட்டங்கள் மானிடர்களுக்காக தனது வாழ்வைத் தியாகம் செய்த இயேசுவின் சிலுவையேற்றம்இ துன்பம் மற்றும் வேதனையை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் தன்னலமறுப்பு, பச்சாதாபம், கொடை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுபடும் புனித வாரத்தின் மகிழ்ச்சிகரமான நிறைவை கொண்டுவருகிறது. இயேசுவின் உயர்த்தெழுகையின் மூலம் காட்டப்படும் மரணத்தை வெற்றிகொள்வதானது தியாக உணர்வு மற்றும் எல்லோருக்கும் அன்பு என்ற கிறிஸ்தவ போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கிறிஸ்தவர்களுக்கு மரணத்தைக் கடந்த…

The President Presides over State Timber Corporation's 47th Year Celebration

காடழித்தலில் ஈடுபட்டிருந்த சில குற்றவாளிகளுக்கு முன்னைய அரசாங்கத்தில் காணப்பட்ட சில அரசியல்வாதிகள் சிலர் அரச ஆதரவை வழங்கியதன் காரணமாக இலங்கையின் தேசிய காட்டு வளம் வெறுமையாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுப்பற்றுள்ள மக்கள் அனைவரும் பாரிய சூழல் அழிவிற்கு எதிரான தீர்ப்பை இவ்வாண்டு ஜனவரி 8ம் திகதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மரக் கூட்டுத்தாபனத்தின் 47வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகவும், 30 வருடத்திற்கு மேற்பட்ட சேவையைப் பூர்த்திசெய்த 47 ஊழியர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கும்…

Health Care Appointments Mar 31 1

சுகாதார அமைச்சானது புதிதாக 2,738 பேரை தாதிய, இணை, துணை மருத்துவ சேவைகளுக்கு உள்வாங்கியுள்ளது. நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (மார்ச் 31) இடம்பெற்றது. ஆரோக்கியமான இலங்கைச் சமுதாயமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் சுகாதார சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த நியமனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக நிமயனம் பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஆயிரத்து ஐநூற்று முப்பது (1,530) பேர் புதிதாக நியமிக்கப்பட்டதோடு, 1,208…

1

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலம் மேம்படுத்துவதற்கு சுவீடன் நம்பிக்கையுடன் காணப்படுவதாக சுவீடனின் பிரதமர் ஸ்டீவன் லொஃப்வென் (Stefan Löfven) தெரிவித்தார். சீனாவின் ஹய்னன் (Hainan) மாகாணத்தில் இடம்பெற்றுவரும் ஆசிய வருடாந்த மாநாடு 2015 இற்கான புவவோ மன்றத்தில் (Boao Forum for Asia Annual Conference 2015) வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இன்று பிற்பகல் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி…

01

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலையொன்றை நி;ர்மாணிப்பதற்கு இலங்கைக்கு நிதியளிப்பதற்கு சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping) அவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மத்திய பீஜிங்கில் இன்றைய தினம் சந்தித்த போது, ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக உதவியை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி ஒப்புக் கொண்டார். இதுவரை சீன அரசாங்கம் இலங்கைக்கு அளித்து வந்த உதவிகளுக்கு…

President Accorded Grand Welcome in China Mar 26

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையும், திருமதி ஜெயந்தி சிறிசேன அவர்களையும், தூதுக்குழுவினரையும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping) அவர்களும், முதற்பெண்மணி பெங் லியூவன் (Peng Liyuan) அவர்களும் சீனாவின் பீஜிங்கிலுள்ள ‘மக்களின் மகத்தான மண்டபத்தில்’ (Great Hall of the People) இடம்பெற்ற உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில் மகத்தான வரவேற்பை மார்ச் 26, 2015 இல் வழங்கினர். வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்விற்கு அடுத்ததாக இரண்டு…

President Arrives in China Mar 25

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவைச் சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் திரு. லியூ ஜியன்சோ அவர்கள் பீஜிங் சர்வதேச விமானநிலையத்தில் மார்ச் 25, 2015 இல் வரவேற்கிறார்.

Page 309 of 315 1 307 308 309 310 311 315

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்