13 (5)

ஐரோப்பிய சங்கம் GSP+ சலுகையை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையும் தடுப்பதற்கு சிலத பண்பற்ற முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்  என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

“ஐரோப்பிய சங்கம் GSP+  சலுகையை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது இந்த நாட்டில் சமஷ்டி முறையை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தின் பேரிலாகும்” என்று இன்று வெளியான பத்திரிகை செய்தி தொடர்பில் கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஊடக சுதந்திரத்தை பிழையாகப் பயன்படுத்தாது நாட்டு மக்களுக்கு உண்மையானதும் சரியானதுமான தகவல்களை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுமாறு தாம் மீண்டும் அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

காலி லபுதுவ சிறிதம்ம கல்லூரியில் இன்று (14) நடைபெற்ற நில மெஹவர (உத்தியோகபூர்வ பணி) ஜனாதிபதி மக்கள் சேவையின் காலி மாவட்ட நிறைவு விழாவைத் தொடர்ந்து இடம்பெற்ற சமய நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த முயற்சி நாட்டை சமஷ்டி முறைக்கு இட்டுச்செல்லவோ, அல்லது நாட்டைத் துண்டாடவோ அல்ல. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்தி நியாயமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி உலகின் அங்கீகாரத்தைப் பெற்ற உன்னத நாடாக எமது நாட்டை மிளிரச்செய்வதற்காகவேயாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டு மக்களினால் தாம் ஜனாதிபதியாக தெரிவூசெய்யப்பட்ட சந்தHப்பத்தில் நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு பல்வேறு தடைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்த பிரச்சினைகளை தீர்த்து அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்பி அபிவிருத்தி மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துசெல்வதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டுவரும் போது நாட்டை விலைபேசுவதாக சிலர்  கோசம் எழுப்புகின்றனர். பல்லாண்டு கால வரலாற்றுப் புகழ்வாய்ந்த எமது தாய்நாட்டின் பெறுமதியை நன்றாகப் புரிந்துகொண்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பேண்தகு யுகம் மூன்றாண்டு உதயம்’ நில மெஹவர (உத்தியோகபூர்வ பணி) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் மகாசங்கத்தினருக்கு ஆயிரம் காவியுடைகளை அன்பளிப்புச் செய்தல், சமய நிறுவனங்களின் அபிவிருத்திக்காக நிலையான கணக்குச் சான்றிதழ் பத்திரங்கள் மற்றும் உறுதிகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயன்த கருணாதிலக, சந்திம வீரக்கொடி, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

04 (9) 06 (8) 07 (7) 09 (6)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்