
– முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர். தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) ஒருங்கிணைப்பின் கீழ் பல முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதானிகள்…

– ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். கல்னேவா மகாவலி மைதானத்தில் இன்று (30)…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார். தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு…

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்(Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை…

பணம் அல்லது அதிகாரத்தினால் வாழ்வை இழந்த சமூகத்திற்கு, பௌத்த தத்துவத்தின் மூலம் ஆன்மிக வாழ்வு அளிக்க முடியும் ஜனாதிபதி குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெராவின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார். வரலாற்று சிறப்புமிக்க எத்கந்த ரஜமகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெரா 1925 ஆம் ஆண்டு தொடங்கியதுடன், இந்த நூற்றாண்டு…

பாதுகாப்புப் பிரிவினரும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து முறையான நடவடிக்கை கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். காட்டு யானைகளின் பிரச்சினை அதிகமாக உள்ள அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை,…

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், 2024 ஆம் வருடத்தின்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி தொன் பிரான்சிஸ் ஹத்துருசிங்க குணவர்தன மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும படபெந்திகே ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்….

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நாட்டிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேபோன்று, கடந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் ஏற்பட்ட மாற்றத்தின் போது நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வெற்றிக்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்….

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.